சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன் விற்க முடியாமல் படகு உரிமையாளர்கள் தவிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

காசிமேடு:காசிமேடில் போலீசார் கெடுபிடியால், மீன்களை விற்க முடியாமல், படகு உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.
இதனால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.சென்னையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொது இடங்களில், ஐந்து பேருக்கு மேல் கூடக் கூடாது என, போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.போலீசார் தடைகாசிமேடு மீன் சந்தையில், தினமும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவது வழக்கம். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், காசிமேடு மீன் சந்தையில் மொத்தம் மற்றும் சில்லரை மீன் விற்பனைக்கு, போலீசார் தடை விதித்துஉள்ளனர். மீன்பிடி துறைமுகத்திற்குள் பொதுமக்கள் வரும், ஆறு வழிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மொத்தமாக மீன்களை வாங்குவோர், வெளிப்பகுதிகளில் விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும், மீன் வாங்க வருவோர், 3 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க அடையாளம் போடப்பட்டதோடு, அங்கு நின்று மீன்களை வாங்கி செல்ல அனுமதித்தனர்.சில்லரை மீன் விற்பனையில் ஈடுபட்ட மீனவர்களிடம் போலீசார் தகராறில் ஈடுபட்டனர். இதனால், போலீசாரும், மீனவர்களுக்கும் இடையே, பல இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கூறியதாவது:காசிமேடில், 30 விசைப்படகுகளில் நேற்று, மீன்கள் விற்பனைக்கு வந்த நிலையில், போலீசாரின் கெடுபிடியால், குறைந்த அளவிலான மக்களே, மீன்களை வாங்கி சென்றனர். வருவாய் இழப்புநான்கு படகு மீன்கள் மட்டுமே விற்பனையானது. மீதமுள்ள அனைத்து படகுகளிலும், மீன்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால், 15 முதல், 18 கோடி ரூபாய் வரை படகு உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X