பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பணி நிறுத்தம்

Added : மார் 27, 2020
Share
Advertisement
 மெட்ரோ ரயில் பணி நிறுத்தம்

கொரோனா எதிரொலியால், வண்ணாரப்பேட்டை - -திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் பாதை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இப்பாதையில் திட்டமிட்டிருந்தபடி, ரயில் போக்குவரத்து துவங்க, தாமதம் ஆகும் என, மெட்ரோ ரயில் அதிகாரி கூறினார்.
சென்னை, விமான நிலையம் -- வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.சோதனை ஓட்டம்இதன் நீட்டிப்பு திட்டத்தில், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, 3,770 கோடி ரூபாய் செலவில், மெட்ரோ ரயில் பாதை பணி நடந்து வருகிறது. வழியில் உள்ள, தியாகராயர் கல்லுாரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விம்கோ நகர் நிலையங்களில், கட்டுமான பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது.ரயில் தண்டவாளம், சிக்னல்கள் முடிந்து, இவ்வாண்டு பிப்ரவரியில் டீசல் இன்ஜின் இயக்கி சோதனை நடத்திய பின், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பின், ஜூன் மாதத்தில் இருந்து, வண்ணாரப்பேட்டை -- விம்கோ நகர் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்களில், வட மாநிலங்களைச் சேர்ந்த, 50 சதவீதம் பேர், கொரோனா வைரஸ் பரவி விடுமோ என்ற பயத்தால், சொந்த ஊர்களுக்கு சென்றதால், சென்னையில் ஒப்பந்ததாரர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்களை வைத்து, பணிகள் தொடர்ந்தன.இந்நிலையில், கொரோனா பரவாமல் தடுக்க, ஏப்., 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.பணிகள் தாமதமாகும்ஏப்., 14க்கு பின், பணிகள் துவக்கப்படுவது குறித்து, உடனடியாக ஏதும் முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளதால், கட்டுமான பணிகள் தாமதமாகும். இதனால், வண்ணாரப்பேட்டை -- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, மெட்ரோ ரயில் போக்குவரத்து, திட்டமிட்டிருந்தபடி துவங்குவது சிரமம். ஜூலை அல்லது ஆகஸ்டில் ரயில் போக்குவரத்து துவங்கப்படலாம் என, மெட்ரோ ரயில் அதிகாரி கூறினார்.
- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X