பொது செய்தி

தமிழ்நாடு

ஊர் சுற்றுவோரே 'கொரோனா'னா என்ன: போலீசிடம் விளக்கம் சொல்லுங்க

Added : மார் 27, 2020
Share
Advertisement
 ஊர் சுற்றுவோரே 'கொரோனா'னா  என்ன:  போலீசிடம் விளக்கம் சொல்லுங்க

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியே சுற்றியவர்களுக்கு இரண்டு மணி நேரம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவோரை தவிர, வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தும் பொறுப்பின்றி சிலர் டூவீலர், காரில் ஆட்களை ஏற்றிக் கொண்டு நகரை வலம் வருகின்றனர். போலீசார் விசாரித்தால், மருந்து, பால் வாங்க செல்வதாக கூறி 'எஸ்கேப்' ஆகின்றனர்.

இந்நிலையில் நேற்று (மார்ச் 26) முதல், 'தேவையின்றி ஊர் சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னும் எதையும் கண்டு கொள்ளாத சிலர், தங்கள் குடும்பம், சமூகத்தை பற்றி அக்கறையே இல்லாமல் வழக்கம் போல் வாகனத்தில் ஊர் சுற்றினர்.2 மணி நேரம் விழிப்புணர்வுதிண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், அம்மா உணவகம், திருச்சி ரோடு, எம்.வி.எம்., கல்லுாரி அருகே மடக்கி பிடித்த வாகன ஓட்டிகளை போலீசார் 2 மணி நேரம் நிற்க வைத்தனர். அவர்களுக்கு ஏ.டி.எஸ்.பி., சுந்தரவதனம், டி.எஸ்.பி., மணிமாறன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் குமார் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இரண்டு மணி நேரம் பொறுத்திருக்க முடியாத சிலர் டூவீலரை அங்கேயே நிறுத்தி விட்டு நழுவினர். விட்டுச் சென்ற டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நிலைமையை அறிந்து பொதுமக்கள் கொரோனாவை ஒழிக்க முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

நுாதன தண்டனை

டூவீலர், கார்களில் வலம் வந்து போலீசாரிடம் பொய் சொல்லி மாட்டிக் கொண்டால், 'கொரோனா'னா என்பது குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மாட்டிக்கொண்டவர் சாலையில் வலம் வரும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வீட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற நுாதன தண்டனை உண்டு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X