பொது செய்தி

தமிழ்நாடு

விளைபொருட்கள் மார்க்கெட் சென்றடைவதில் பிரச்னை: கிராமங்களில் விற்பனை அதிகரிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

கன்னிவாடி: பூ, காய்கனி உள்ளிட்ட விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்வதில் பிரச்னையால், குக்கிராமங்களில் விவசாயிகளின் நேரடி விற்பனை அதிகரித்துள்ளது.

கன்னிவாடி, ஆத்துார், சின்னாளபட்டி, கொடைரோடு பகுதிகளில், பூ, காய்கனி, பயறு வகை சாகுபடி கணிசமான அளவில் நடக்கிறது. தற்போது போதிய மழையின்மை, அதிக வெப்பம் போன்ற இயற்கை சவால்களை கடந்து, பூக்கள், தக்காளி, வெங்காயம், வெண்டை, கீரைகள் சாகுபடி நடக்கிறது. இவற்றை பஸ், சரக்கு வேன்கள் மூலம் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நிலக்கோட்டை மார்க்கெட்களுக்கு கொண்டு செல்வது வழக்கம்.தற்போது ஊரடங்கு காரணமாக, வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் எடுத்துச்செல்வதிலும் போலீஸ் கெடுபிடி, அதிக மூடைகள் கொண்டு செல்ல முடியாதது போன்ற சிக்கல்கள் உள்ளன. இதையடுத்து மார்க்கெட்களுக்கு விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பில் உள்ளனர்.இதனால் சிலர், காய்கறிகளை பறிப்பதை தவிர்க்கின்றனர். பலர் பறித்த பொருட்கள் வீணாகக் கூடாது என்பதால் தட்டுக்கூடைகளுடன் குக்கிராமங்களில் நேரடியாக விற்க களமிறங்கியுள்ளனர். இதனால் நகர பகுதிகளுக்கு காய்கறிகள் செல்வது குறைந்து, அங்கு விலை அதிகரிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X