பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார பணியாளர்கள், போலீசாருக்குமுகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்படுமா

Added : மார் 27, 2020
Share
Advertisement

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சுகாதார பணியாளர்கள், போலீசாருக்கு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக, நாடு முழுவதும் ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், துாய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்பு துறையினர் 24 மணி நேர பணியில் உள்ளனர்.துாய்மை பணியாளர்கள் தெருக்களை துாய்மைப் படுத்துவதோடு, பூட்டியிருக்கும் கடைகள், நிறுவனங்கள் மீது கிருமிநாசினி தெளித்தும் வருகின்றனர். சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், செவிலியர்கள் வெளிநாடுகள், 'கொரோனா' பாதித்த மாநிலங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு முறையாக முகக் கவசம், கையுறை, பிரத்யேக ஆடை, கைகளை சுத்தப்படுத்தி கொள்ள கிருமிநாசினி எதுவும் போதுமான அளவு வழங்கவில்லை. இதேபோல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் இதுவரை முகக் கவசம், கைக்கழுவ கிருமிநாசினி வழங்கவில்லை.வேறு வழியின்றி வீட்டில் இருக்கும் துணிகளை தைத்தும், கைக்குட்டைகளை முகக்கவசமாகவும் பயன்படுத்தியும் நிலைமையை சமாளிக்கின்றனர். இதனால் சுகாதார பணியாளர்கள், போலீசார் அதிருப்தியில் உள்ளனர். இவர்களுக்கு உடனே தேவையான அளவு முகக் கவசம், கிருமிநாசினி வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X