பொது செய்தி

தமிழ்நாடு

கிருமிநாசினி தெளிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பூட்டியிருக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள் மீது மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக, கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், சுற்றுலாத்தலங்கள், தியேட்டர்கள், வணிக நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இருப்பினும் பால், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடை இல்லை. தினமும் மாநகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட், பூட்டியிருக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், கோயில்கள், அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் கடைகள், மருந்தகங்களில் கிருமிநாசினிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.கிருமிநாசினி கிடைக்காதவர்கள் சோப், சோப் ஆயில் கொண்டு கைகளை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி 48 வார்டில் சுகாதார பணியில் 500 துாய்மை காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பணிகள் பாதிக்காமல் இருக்க இவர்களுக்கு காலை, மதியம் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X