பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோரை அரவணைத்த தீயணைப்புத் துறை

Added : மார் 27, 2020
Share
Advertisement

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கி நேசக்கரம் நீட்டினர்.

நாடு முழுவதும் கொரோனாவுக்காக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆதரவற்றோர் உணவின்றி தவிப்பதை எண்ணி வத்தலக்குண்டு தீயணைப்பு வீரர்கள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். நிலையத்தில் பணிபுரியும் 17 பேரும் தங்களது சம்பளத்தில் சிறிய தொகையை பங்களிப்பாக வழங்கி, நிலையத்திலேயே உணவு சமைத்தனர். ஆதரவற்ற முதியவர்கள் 50 பேருக்கு உணவு பொட்டலத்தை 250 மி.லி., தண்ணீர் பாட்டிலுடன் வழங்கினர்.நிலைய அலுவலர் பொன்னம்பலம் கூறுகையில், ''மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள் என அறிவுறுத்தினார். உடன் பணியாற்றுவோர் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கலாம் என்றனர். போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தீயணைப்பு வீரர்கள் ஒருங்கிணைந்து எங்களது சம்பள பணத்தில் மதிய உணவு வழங்கினோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X