பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் வழிகாட்டி நிறுவனம் உதவி எண்கள் அறிவிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

சென்னை :'அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்களுக்கு உதவி தேவையெனில், 'இ - மெயில்' அல்லது அலைபேசிகளில் அழைக்கலாம்' என, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, 'டுவிட்டர்' பக்கத்தில், தொழில் வழிகாட்டி நிறுவனம் பதிவு செய்த தகவல்:கொரோனா ஊரடங்கு உத்தரவில், அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க, தேவையான உதவிகள் மற்றும் விளக்கங்களுக்கு, covidsupport@investtn.in என்ற, 'இ - மெயில்' முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், 99629 93497, 99629 93493, 99629 93496, 99620 13263, 78240 01213 ஆகிய, பிரநிதிகளின் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொழில் வழிகாட்டி நிறுவனம், உங்களுக்கு வழிகாட்டுவதற்காகவே உள்ளது. எனவே, எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X