பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதி?

Added : மார் 27, 2020
Share
Advertisement

சென்னை :'தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் நடைமுறையை விரிவாக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தற்போது, கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 500ஐ தாண்டியுள்ளது.நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அவற்றை எதிர்கொள்ளும் அளவுக்கு, அரசு மருத்துவமனைகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்பது கேள்விக்குறியே.கட்டமைப்பு வசதி குறித்து, பிரதமர் தன் உரையில் கூறாதது, ஏமாற்றம் அளிக்கிறது. அவரது பேச்சின் பெரும்பகுதி, மக்களை தனிமைப்படுத்துவது, சமூக விலகல் குறித்து தான் இருந்தது. போர்க்கால நடவடிக்கை குறித்து, அவரது உரையில் எதுவும் இல்லை.இந்தியா முழுவதும், கொரோனா சிகிச்சைக்கு, 70 மருத்துவமனைகளில் மட்டுமே, படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சை அளிப்பதை, தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். அவர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில், பாதுகாப்பு உடை, முகக்கவசம், கையுறை, அங்கிகள் மற்றும் கண்களை பாதுகாக்கும் கவசம் போன்றவற்றை வழங்க வேண்டும்.கொரோனா கிருமி பரவல் சங்கிலியை உடைப்பதன் வாயிலாக, இந்த நோயை எதிர்கொண்டு, நம்மால் வெற்றி பெற முடியும். இதற்கு, மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.இவ்வாறு, கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X