பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பயமின்றி திரிந்தவர்களை தெறிக்கவிட்ட போலீஸ் எஸ்.பி.,

Added : மார் 27, 2020
Share
Advertisement

வேடசந்துார்: ஊரடங்கு வேளையில் வேடசந்துாரில் சுற்றித்திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சக்திவேல் பேசியது நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.உலகையே உலுக்கிவரும் கொரோனா தாக்குதலால், இந்தியாவில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கம் துவங்கிய பின்பும், மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்றி, முகக்கவசம் (மாஸ்க்) இல்லாமல் வாகனங்களில் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் வேடசந்துார் ஆத்துமேடு பகுதிக்கு வந்த மாவட்ட எஸ்.பி.,சக்திவேல், அங்கு திரளாக இருந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பார்த்து மலைத்துவிட்டார். கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர், மைக்கை பிடித்து பேசிய பேச்சால், வாகனங்களில் திரண்டு நின்றவர்கள் அதிர்ந்துவிட்டனர்.அவர் பேசியதாவது: படித்தவர், படிக்காதவர் எல்லாம் ரோட்டுக்கு வந்திருக்கிறீங்க. இப்படி இருந்தா எப்படி கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இன்னும் நுாறு, ஆயிரம் பேருக்கு பரப்ப தயாராகி வருகிறீர்கள்.உங்களால் வீட்டில் இருக்க முடியவில்லையா? உங்களுக்கு கொஞ்சமாவது சமுதாய பொறுப்பு இருக்கா. வீட்டுக்கு போய் உங்கள் மனைவி, பிள்ளைங்களுக்கு நோயை பரப்ப போகிறீர்களா. பதினைந்து நாட்களாக நிலைமை சீரியஸ் ஆக உள்ளது. இது தேசிய பேரிடர். உங்கள் நடவடிக்கை சரியில்லை. இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்படி இருந்தால் ஆஸ்பத்திரிதான் ஜெயில், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X