தேனியில் கிருமி நாசினி தெளிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 27, 2020
Share
 தேனியில் கிருமி நாசினி தெளிப்பு

தேனி: தேனி தீயணைப்புத்துறை, தேனி அல்லிநகரம் நகராட்சியின் சார்பில், - மதுரை ரோடு கலெக்டர் அலுவலகம் வரையும், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் அல்லிநகரம் வரை வணிக கடைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கியது.

தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் (பொ) மணிகண்டன், நிலைய அலுவலர் மனோகரன், முதன்மை தீயணைப்பு வீரர்கள் பணிகளில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையாளர் நாகராஜன், நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையிட்டனர்.சுகாதார அலுவலர் கூறுகையில், 'தீயணைப்புத் துறையின் மினி வாகனம் 300 லிட்டர் கொள்ளளவு கொண்டது. அதில் 10 லிட்டருக்கு 320 கிராம் பிளீச்சிங் பவுடர் என்ற கணக்கில் ைஹப்போ குளோரைட் கிருமி நாசினி தயாரிக்கப்பட்டு, 'கொரோனா' தடுப்புக்காக தேனி- மதுரை ரோடு, பெரியகுளம் ரோட்டில் உள்ள வணிக வளாகங்களில் தெளிக்கப்பட்டது. அனைத்துப்பகுதிகளிலும் தெளிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X