மூன்று குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு உதவிய போலீஸ் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூன்று குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு உதவிய போலீஸ்

Added : மார் 27, 2020
Share
காஞ்சிபுரம் : மூன்று குழந்தைகளுடன், நடக்க முடியாமல் தவித்த பெண்ணை, ரோந்து பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரித்து, காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்த்தார்.ஊரடங்கு உத்தரவால், இரண்டாவது நாளாக நேற்று, காஞ்சிபுரத்தில், பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து தடைபட்டது.இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, காஞ்சிபுரம் ஆஸ்பிட்டல் சாலை, கால்நடை மருத்துவமனை அருகில்,


காஞ்சிபுரம் : மூன்று குழந்தைகளுடன், நடக்க முடியாமல் தவித்த பெண்ணை, ரோந்து பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரித்து, காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்த்தார்.ஊரடங்கு உத்தரவால், இரண்டாவது நாளாக நேற்று, காஞ்சிபுரத்தில், பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து தடைபட்டது.இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, காஞ்சிபுரம் ஆஸ்பிட்டல் சாலை, கால்நடை மருத்துவமனை அருகில், மூன்று குழந்தைகளுடன், பெண் ஒருவர், சாலையோரம் அமர்ந்திருந்தார்.அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில், தனியாக உட்கார்ந்திருந்த பெண்ணிடம் விசாரித்தார்.அந்த பெண் கூறியதாவது:காஞ்சிபுரத்தில் இருந்து, 12 கி.மீ., உள்ள விப்பேடு ஊராட்சி, குண்டுகுளம் கிராமத்தில் வசிக்கிறேன்.என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை. மூன்றாவது குழந்தைக்கு, காய்ச்சல் உள்ளது. எனக்கும், கைகளில் குடைச்சல் உள்ளது. மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்; சோர்வாக இருந்ததால், சாலையோரம் அமர்ந்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, போலீஸ் அதிகாரி, மூன்று குழந்தைகளுடன் அந்த பெண்ணையும், ரோந்து வாகனத்தில் ஏற்றி, அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டார்.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது, சாலையில் செல்வோரை, காரணம் கேட்காமலேயே விரட்டி அடிக்கும் நிலையில், நடக்க முடியாமல், குழந்தைகளுடன் தவித்த பெண்ணை, கருணையுடன் விசாரித்து, மருத்துவமனையில் சேர்த்த போலீஸ் செயல் பாராட்டுக்குரியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X