மூடப்பட்ட மருத்துவமனை தனிமை வார்டாக மாறுகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூடப்பட்ட மருத்துவமனை தனிமை வார்டாக மாறுகிறது

Added : மார் 27, 2020
Share
கூடலுார்; குமுளியில் மூடப்பட்ட தனியார் மருத்துவமனையை தனிமைப்படுத்தும் வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 'கொரோனா' அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குமுளி அருகே இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமானபெரியாறு
 மூடப்பட்ட மருத்துவமனை தனிமை வார்டாக மாறுகிறது

கூடலுார்; குமுளியில் மூடப்பட்ட தனியார் மருத்துவமனையை தனிமைப்படுத்தும் வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 'கொரோனா' அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குமுளி அருகே இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமானபெரியாறு மருத்துவமனை பல்வேறு பிரச்னை காரணமாக சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.கொரோனா தாக்கம் முடியும் வரை இந்தமருத்துவமனையை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்ற கேரள சுகாதாரத்துறையும், குமுளி பஞ்சாயத்து நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால் ஏற்கனவே இந்த மருத்துவமனையில் இருந்த படுக்கை உள்ளிட்டவைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X