பொது செய்தி

தமிழ்நாடு

ஏலத்தோட்டங்களில் பணிகள் முடக்கம்: தொழிலாளர்களை எச்சரித்த போலீஸ்

Added : மார் 27, 2020
Share
Advertisement
கம்பம்: கேரளா, இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்களில் பணிகள் முடங்கியதால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். வேலைக்கு சென்ற கேரள தொழிலாளர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பினர்.இடுக்கி மாவட்டத்தில் வண்டன்மேடு, மாதவன்கானல், மாலி, சாஸ்தாநடை உள்ளிட்ட பல இடங்களில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.

கம்பம்: கேரளா, இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்களில் பணிகள் முடங்கியதால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

வேலைக்கு சென்ற கேரள தொழிலாளர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பினர்.இடுக்கி மாவட்டத்தில் வண்டன்மேடு, மாதவன்கானல், மாலி, சாஸ்தாநடை உள்ளிட்ட பல இடங்களில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் இந்த தோட்டங்கள், தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் உள்ளது. இங்கு வேலை செய்யவும் நுாற்றுக்கணக்கான ஜீப்புகளில் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் செல்வர். உச்சபட்ச வெயில் அடித்து வருகிறது. செடிகளை காப்பாற்ற தண்ணீர் தெளிக்க வேண்டும். நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து, கவாத்து அடிக்க வேண்டும். பழம் எடுக்க வேண்டும்.'கொரோனா' தடுப்புக்காக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இப்பணிகளை செய்ய தொழலாளர்கள் வரமுடியவில்லை. இடுக்கி மாவட்டமும் தனிமைப்படுத்தும் பட்டியலில் உள்ளது.கிலோ சராசரி விலை ரூ. 2 ஆயிரத்து 400 வரை கிடைத்து வந்தது. ஏலம் நடக்காததால் தோட்டங்களில் எடுக்கும் காயை விற்க முடியவில்லை. கொள்முதல் செய்த வியாபாரிகளிடமிருந்து பணத்தை வாங்க முடியாமல் ஏலக்காய் ஆக்சன் கம்பெனிகள்,வாங்கிய காயை விற்க முடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர். வேலை செய்ய முடியாமல் விவசாயிகள் முடங்கியுள்ளனர்.ஏலக்காய் தொழில்நுட்ப ஆலோசகர் வி.எம்.அன்பழகன் கூறுகையில், கொரோனா நோய் ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள், ஆக் ஷன் கம்பெனிகளை கடுமையாக பாதித்துள்ளது. வர்த்தகம் நடைபெறாததால், கோடிக்கணக்கில் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தோட்டங்களில் வேலை நடைபெறவில்லை. நேற்று முன்தினம் ஏலத்தோட்டங்களில் கேரளாவை சேர்ந்த தொழிலாளர்கள் சென்றதை, அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X