பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பாதையில் போலீஸ் கண்காணிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

தேவாரம்: தேவாரத்திலிருந்து சாக்குலுாத்து, குதிரை பாஞ்சான் மெட்டுக்கு செல்லும் வனப்பாதைகள் போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

'கொரோனா' தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட, மாநில எல்லைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு எல்லை தாண்டி வருபவர்களை மருத்துவத்துறையினர் காய்ச்சல், சளி தொந்தரவுள்ளதா என்று பரிசோதித்து அனுமதிக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தேவாரம், கோம்பை பகுதியை சேர்ந்தவர்கள் கேரளா செல்வதற்கு ராமக்கல், சாக்குலுாத்து, குதிரை பாஞ்சான் மெட்டுக்கு வனத்தின் வழியாக பாதை உள்ளது.கேரள ஏலத்தோட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் வனப்பாதையில் கண்காணிப்பில்லாமல் இருந்ததால் எளிதாக நடந்து சென்றனர். இவ்வாறு கேரள பேத்தட்டியிலிருந்து ராசிங்காபுரத்திற்கு வனப்பாதை வழியாக வந்த 4 பேர் காட்டு தீயில் சிக்கி பலியானார்கள். இதனால் வனப்பாதையில் மக்கள் நடமாட கலெக்டர் தடை விதித்தார். தற்போது கேரளா, தமிழகத்தை இணைக்கும் வனப்பாதைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு எஸ்.ஐ., தலைமையில் மூன்று பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கேரளா செல்பவர்களை தடுத்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X