பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' சிகிச்சை மையமாக ஈஷா வளாகத்தை பயன்படுத்துங்க!:சத்குரு அறிவிப்பு

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
'கொரோனா' ,சிகிச்சை மையமாக,ஈஷா, வளாகத்தை பயன்படுத்துங்க!,:சத்குரு அறிவிப்பு

கோவை:''கோவை ஈஷா யோகா மைய வளாகத்தை, 'கொரோனா' சிகிச்சை மையமாக, தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துஉள்ளார்.

'கொரோனா' பாதிப்பை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி, 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்
செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் தன்னார்வலர்களை கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளை, 'கொரோனா' ஒழிப்பு பணியில் மக்களுக்கு சேவையாற்ற முன்வந்துள்ளது.

'ஈஷா' அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளதாவது:இந்தியாவில் உள்ள ஈஷா
தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும், தங்கள் பகுதியில் வேலையின்மை காரணமாக, பசி,
பட்டினியால் வாடுவோருக்கு, தங்களால் இயன்ற அளவுக்கு உணவளித்து உதவ வேண்டும். இந்த இக்கட்டான சூழலில், ஒவ்வொரு குடிமக்களும், தனிநபராக, நம்மால் இயன்றதை செய்வது மட்டுமின்றி, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும்,
ஒத்துழைப்பு அளிப்பது நமது கடமை.

தமிழகத்தில் 'கொரோனா' பாதிப்புக்கு, பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க, கூடுதல் இடம் தேவைப்படும் சூழல் உருவானால், ஈஷா வளாகத்தை, தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-மார்-202000:01:17 IST Report Abuse
Rajamanickam Ragupathi Parking Dogs make noise for every thing, But the helping hands always ignored the useless comments.R. RAGUPATHI
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
27-மார்-202018:32:01 IST Report Abuse
chakra எல்லாம் தெரியும் என்று சொல்லும் இவனை வூஹானுக்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டும்
Rate this:
Cancel
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
27-மார்-202014:16:20 IST Report Abuse
nagendirank தங்களது பெருந்தன்மைக்கு நன்றி ஈஷா. இதோடு நிற்காமல் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உங்களுடைய உதவியாக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கவும் மனோதிடம் பெறவும் உள்ள யுக்திகளை இலவசமாக சொல்லி தந்தால் அனைவரும் பயன் பெறுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X