பொது செய்தி

தமிழ்நாடு

ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில்இருப்பு வைத்துக் கொள்ள அழைப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

கம்பம்: விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலையில் இருப்பு வைத்து விற்க ஒழுங்கு முறை விற்பனை கூடங்களை பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை சந்தைப்படுத்த முடியாத நிலையில் அருகில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் இருப்பு வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். வாடகை கட்டணம் ஏதுமில்லாமல் 30 நாட்களுக்கு இலவசமாக வைத்துக் கொள்ளலாம். மேலும் பொருளீட்டு கடன் பெறுவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள 15 நாட்கள் என்பதை, ஒருமாதம் வட்டியில்லாமல் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதுகாத்து வைத்துள்ள விளைபொருள்களின் அன்றாட சந்தை மதிப்பில் 75 சதவீதம் அதாவது ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் கடன் பெற்றுக்கொள்ளலாம்.இந்த கடனை திருப்பி செலுத்த அதிகபட்சம் 6 மாதங்கள் அனுமதிக்கப்படும். இதற்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள்,தங்களின் விளைபொருள்களை இருப்பு வைத்துக் கொள்ள, அருகில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களை அணுக வேளாண் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மாவட்டத்தில் கம்பம், சின்னமனுார், போடி, தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பல இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X