பொது செய்தி

தமிழ்நாடு

தேவாரத்தில் இருமடங்கான காய்கறி விலை

Added : மார் 27, 2020
Share
Advertisement

தேவாரம்: தேவாரம் தினசரி மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து சரிந்ததால் விலை இரு மடங்காக உயர்ந்தது.கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் காய்கறி உற்பத்தி சரிந்துள்ள நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால் எடுப்பு பணி மந்தமாகியுள்ளது.

இதனால் தேவாரம் மார்க்கெட்டிற்கு வரும் காய்கறி அளவு பாதியாக சரிந்துள்ளது. வரத்தை விட தேவை அதிகரித்துள்ளதாலும், கேரள வியாபாரிகள் வருகையாலும் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.இரண்டு நாட்களுக்கு முன் ரூ. 400க்கு விற்பனையான ஒரு சிப்பம் முட்டை கோஸ்(80 கிலோ) ரூ. 650 ஆக உயர்ந்துள்ளது. ரூ. 60க்கு விற்பனையான தக்காளி ஒரு பெட்டி(15 கிலோ) ரூ. 110 ஆகவும், ஒரு கிலோ தட்டை பயறு ரூ. 15லிருந்து ரூ. 30க்கும், சின்ன வெங்காயம் ரூ. 50லிருந்து ரூ. 90க்கும், வெண்டை ரூ. 18 லிருந்து ரூ. 30க்கும், பூசணி ரூ. 5லிருந்து ரூ. 8 ஆகவும், கத்தரி ரூ. 20 லிருந்து ரூ. 30க்கும், பாகற்காய் ரூ. 10லிருந்து ரூ. 25 ஆகவும், பீர்க்கங்காய் ரூ. 10 லிருந்து ரூ. 20க்கும், பச்சை மிளகாய் ரூ. 15 லிருந்து ரூ. 25 ஆகவும் விலை உயர்ந்து விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X