கொரோனாவுக்கு தெரியுமா, மனித உரிமை மீறல்! வாட்ஸ் ஆப்பில் வக்கீல் - போலீஸ், லடாய்| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு தெரியுமா, மனித உரிமை மீறல்! 'வாட்ஸ் ஆப்'பில் வக்கீல் - போலீஸ், 'லடாய்'

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (47)
Share
ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், வெளியே வரும் மக்களை, போலீசார் அடிப்பதை கண்டித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பதிவிட்ட ஆடியோவுக்கு பதிலடியாக, போலீசாரும், 'வாட்ஸ் ஆப்'பில் ஆடியோ பதிவு வெளியிட்டனர். இது, வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர, மக்கள் வெளியே வரக் கூடாது என,
கொரோனாவுக்கு, தெரியுமா, மனித உரிமை,மீறல்! 'வாட்ஸ் ஆப்'பில் ,வக்கீல் - போலீஸ், 'லடாய்'

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், வெளியே வரும் மக்களை, போலீசார் அடிப்பதை கண்டித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பதிவிட்ட ஆடியோவுக்கு பதிலடியாக, போலீசாரும், 'வாட்ஸ் ஆப்'பில் ஆடியோ பதிவு வெளியிட்டனர்.

இது, வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர, மக்கள் வெளியே வரக் கூடாது என, கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பலரும் தேவையின்றி, சர்வ, சாதாரணமாக, சாலைகளில் உலா வருகின்றனர். சில இடங்களில், அவர்களிடம் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வரும் நிலையில், சில போலீசார், லத்தியை சுழற்றி, கடமையை செய்து வருகின்றனர். இதில், அத்தியாவசிய தேவைக்காக வரும் சிலர் மீதும் லத்தி பட, அதுவே பிரச்னையாகி வருகிறது.


எச்சரிக்கை

இந்நிலையில்,அடிக்கும் போலீசாரை எச்சரித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் பேசிய ஆடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.ஆடியோவில் வழக்கறிஞர் பேசியதாது:தமிழக காவல் துறைக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி விடுக்கும் எச்சரிக்கை.

மக்கள், 144 தடை உத்தரவை மீறினால்,இந்திய தண்டனை சட்டம், 188 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.'வெளியே வராதீர்கள்' என, அறிவுரை தான் வழங்க வேண்டும். அடிக்க, உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. டி.ஜி.பி., திரிபாதி, இ.பி.எஸ்., அல்லது ஓ.பி.எஸ்., அதிகாரம் கொடுத்தார்களா?நீங்கள் அடிப்பதை வீடியோ எடுத்து, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அடித்தவர்கள் அத்தனை பேரும், வேலையை விட்டு தான் போக வேண்டும். 3ஏ அல்லது 3பி தான் கொடுக்க வேண்டும். நாங்கள் வழக்கறிஞர்கள்; வெளியே வருவோம்.


எங்களை அடிப்பீர்களா?பொதுமக்களை, போலீசார் அடித்தால், உங்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என, வழக்கு தொடர்வேன். மக்களுக்கு அறிவுரை வழங்குங்கள். கொரோனா இருந்து வந்தால், 270, 271 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.ஜாமினில் விட்டால் விடட்டும். அதை தவிர்த்து, மக்களை அடித்தால், அனைவரும் வேலையை விட்டு தான் செல்ல வேண்டும். இது எச்சரிக்கை.இவ்வாறு, அவர் பேசியிருந்தார்.

இதற்கு, போலீசார் பதில் ஆடியோ வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணமூர்த்தி ஐயா... தடை உத்தரவை மீறி, யாரும் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால், வழக்கு பதிவு செய்ய, எங்களுக்கு தெரியும். அதை நீங்கள் சொல்லி தர தேவையில்லை. நாங்களும், சட்டம் படித்துள்ளோம்.

வழக்கறிஞராக இருந்தாலும், 144க்கு கட்டுப்பட்டவர் தான். அனைவரும், இந்திய தண்டனை சட்டத்திற்கும், குற்ற விசாரணை முறை சட்டத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் தான்.எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, எங்களுக்கு சொல்லி தர தேவையில்லை. கொரோனாவுக்காக தான், 269, 279 போட வேண்டும் என்பதல்ல.


மனித உரிமை மீறல்

ஒரு நோய் தொற்று பரவும் என தெரிந்து வெளியே வந்தால், 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். கவனக்குறைவாக வெளியே வந்தால், 269 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். வேலை பிரச்னை, 3ஏ, 3பி அல்லது வீட்டிற்கு அனுப்பி விட்டாலும் கவலையில்லை.சிங்கம் படத்தில் கூறியது போல், மளிகை கடை வைத்து பிழைத்துக் கொள்வோம்.

நாங்கள் சாலையில் வரும் எல்லோரையும் அடிக்கவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் மக்களைஅடிக்கவில்லை.தேவையில்லாமல், உங்களை போல் வாய் பேசி சுற்றித் திரிபவர்களை தான் அடிக்கிறோம். நீங்கள் செய்வதை செய்யலாம் ஐயா.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
உயிர்க் கொல்லியான, ஆபத்தான கொரோனாவுக்கு எதிராக, அரசும், மக்களும் போரிட்டு வரும் நிலையில், களத்தில் பணியாற்றும் போலீசாரின் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல், கட்டுப்பாடு காத்து, நோய் தொற்றை விரட்ட, அரசுக்கும், போலீசாருக்கும் உதவ வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில், தன் உயிரை பற்றியும், அடுத்தவரை பற்றியும் கவலைப்படாமல், மேம்போக்காக சுற்றித்திரிபவர்களை, காவல் துறையினர், 'கவனித்தால்' அது எந்த வகையிலும், மனித உரிமை மீறல் ஆகாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X