தமிழ்நாடு

தேனி மாவட்டத்தில் போலீஸ் எல்லைகளும்... மூடப்பட்டன ஊரடங்கால் நடவடிக்கை தீவிரம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

கம்பம்: 'கொரோனா' தடுப்புக்காக மாநில, மாவட்ட எல்லைகளை தொடர்ந்து போலீஸ் எல்லைகளும் மூடப்பட்டன. இதனால் அத்தியாவசியம் தவிர மற்ற போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.

'கொரோனா' வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால் காய்கறி, பால்,பலசரக்கு, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில, மாவட்ட எல்லைகளை மூடி படிப்படியாக போக்குவரத்தை தடை செய்தனர்.

தற்போது ஒவ்வொரு போலீஸ் எல்லையையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், வீரபாண்டி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. நுழையும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கம்பத்தில் அரசு பஸ் டெப்போ, காமயகவுண்டன்பட்டி ரோடு, சுருளிப்பட்டி ரோடு, குமுளி ரோடு போன்ற இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல உத்தமபாளையம் போலீசார் கோகிலாபுரம் விலக்கு, கோம்பைரோட்டில் கருக்கோடை, க.புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோரும் நீண்ட விசாரணைக்குப்பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X