பொது செய்தி

தமிழ்நாடு

அறுவடைக்கு காத்திருக்கும் பயிர்கள் ஊரடங்கால் விவசாயிகள் அதிர்ச்சி

Added : மார் 27, 2020
Share
Advertisement
 அறுவடைக்கு காத்திருக்கும் பயிர்கள் ஊரடங்கால் விவசாயிகள் அதிர்ச்சி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில், 2,500 ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தயார் நிலை
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கூவம், இருளஞ்சேரி, நரசிங்கபுரம், குமாரசேரி உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமத்தில் 2,500 ஏக்கரில், நெல் பயிர் பயிரிடப்பட்டுள்ளது.இந்த நெல் பயிர்கள், தற்போது, நன்றாக விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், தற்போது பரவி வரும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் இந்தியா முழுதும் ஏப்ரல் மாதம், 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள், அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.நடவடிக்கைஇதனால், நெல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.எனவே, தமிழக அரசு நெல் பயிரை அறுவடை செய்ய உத்தரவு வழங்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X