பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே பணியாளர் எண்ணிக்கை குறைப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஸ்டேஷன் பணியாளர் எண்ணிக்கை, 80 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் அலுவலர்கள் உட்பட 120 பேர் பணியாற்றுகின்றனர். ரயில்வே போலீசார், ஆர்.பி.எப்., அலுவலர், 30 பேர் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நேற்று முன்தினம் இரவு திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார், ஆர்.பி.எப்., அலுவலர்கள் தவிர மற்றவர்களை பாதுகாப்பு கருதி உள்ளே அனுமதிப்பதில்லை.நேற்று முதல் பணியாளர் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் புக்கிங் செயல்படுவதால், ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு வருகிறார். சரக்கு ரயிலுக்கு சிக்னல் வழங்குவதற்கான 'பாயின்ட் மேன்', தண்டவாள பராமரிப்பாளர் என, 22 பேர் பணியில் உள்ளனர்.வணிகப்பிரிவு அலுவலர்களுக்கு தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், 120 பேர் பணியாற்றிய நிலையில், தற்போது, 30 பேர் மட்டுமே பணிக்கு வருகின்றனர். மற்றவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X