பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று மருத்துவ சிகிச்சை: சுழற்சி முறையில் பணிபுரிய ஏற்பாடு

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர், மருத்துவ கல்லுாரியில், கொரோனா சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர்கள், செவிலியர்கள் சுழற்சிமுறையில் பணியமர்த்தப்படவுள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், எளிதில் அடையாளம் காணவும் முடியும். காய்ச்சல், சளி, இருமலுடன் மருத்துவமனைக்கு சென்றால், அவர்கள் எளிதில் கண்டறியப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர், பெரிச்சிபாளையம் மருத்துவ கல்லுாரியில், 120 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கிறது. அதில், ஐ.சி.யு., பிரிவில், 20 படுக்கைகள்; கண்காணிப்பு பிரிவில், 50 படுக்கைகள்; தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், 50 படுக்கைகள் இருக்கும். டாக்டர்கள், செவிலியர்கள் சுழற்சிமுறையில், ஒரு வார ஓய்வு இடைவெளியில், பணியமர்த்தப்படவும் உள்ளனர்.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:கொரோனா சிகிச்சைக்கு, சுழற்சி முறையில் டாக்டர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர். நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், டாக்டர்கள், நர்சுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும்.டாக்டர்கள் ஒரு வார விடுப்பில் வீடுகளில் ஓய்வெடுக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், கொரோனா தடுப்பு பணிக்கு எப்போது அழைத்தாலும் உடனடியாக வரும் வகையில் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X