பொது செய்தி

தமிழ்நாடு

தேனி உழவர்சந்தை புது பஸ் ஸ்டாண்டிற்கு மாற்றம்: கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

தேனி: தேனி மீறுசமுத்திரம் கண்மாய் அருகே இயங்கிய உழவர்சந்தை, பென்னிகுவிக் புது பஸ் ஸ்டாண்டிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

இன்று முதல் தினசரி காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை இயங்கும்'' என, கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:அம்மா உணவகங்களில் களப்பணியில் உள்ளவர்கள், ஆதரவற்றோருக்கு மூன்று வேளை உணவு கொடுக்கும் வகையில் தயார் செய்ய அதற்கான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 10,227 பேர் உணவு உண்டுள்ளனர்.கண்காணிப்பில் 124 பேர்ஜூன் முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை வெளிநாடுகளில் இருந்து தேனி திரும்பிய 124 தனிமைப்படுத்தப்பட்டு, 'கொரோனா'பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு எந்தவித நோய் தொற்றும் இல்லை. எனினும் 2 கட்ட பரிசோதனைக்கான 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.எம்.பி., உதவிதேனி எம்.பி., ரவீந்திரநாத்குமார் , நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ உபகரணங்கள், பொருட்கள் வாங்க ரூ.1 கோடியை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கியுள்ளார். அதை வைத்து தேவையானவை வாங்கும் பணிகள் நடந்து வருகின்றன.உழவர்சந்தை மாற்றம்தேனி மீறு சமுத்திர கண்மாய் அருகே நீண்டகாலமாக இயங்கி வந்த உழவர் சந்தை, நோய் தொற்று பரவுதை தடுக்கவும், சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவும் ஜான் பென்னிகுவிக் புதுபஸ் ஸ்டாண்டிற்கு தடுப்பு நடவடிக்கைகள் முடியும் வரை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு உழவர்சந்தை இன்று முதல் தினமும் காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை இயங்கும். இதில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை சமூக இடைவெளியில் நின்று பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X