அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரு ஆர்டரை கூட ரத்து செய்யாதீர்! ஜவுளி அமைச்சர் வேண்டுகோள்

Added : மார் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருப்பூர்: 'இந்தியாவுக்கு வழங்கிய ஒரு ஆர்டரை கூட ரத்து செய்யாதீர்' என, வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு, ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது: 'கொரோனா'வால், உலகமே பாதிப்படைந்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகர்களே, இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கிய ஒரு ஆர்டரை கூட ரத்து செய்யாதீர்கள். வேண்டுமானால், ஆடைகளை இறக்குமதி செய்யும் காலத்தையும், ஆடைக்கான தொகையை வழங்குவதற்கான காலத்தையும் நீட்டித்து கொள்ளுங்கள்.உங்களுக்காக தயாரிக்கப்பட்ட ஆடைகளை பெற்று கொள்ளுங்கள். ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டால், பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொடர்ந்து ஆதரவு அளித்து, இந்திய ஆடை உற்பத்தி துறையை பாதுகாக்க, கைகொடுக்க வேண்டும்.உலகுக்கே முன்னுதாரணமாக, கருணையோடும், இரக்கத்தோடும் நாம் வியாபாரம் செய்வோம். ஆயத்த ஆடை உற்பத்தி துறையினரே, பிரதமர் மோடியின் அரசு, உங்கள் தோளோடு தோள் நின்று காக்கும். இவ்வாறு, உணர்ச்சிபூர்வமாக வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவை, ஆடை ஏற்றுமதியாளர்கள், தங்களுக்கு ஆர்டர் வழங்கும் வெளிநாட்டு வர்த்தகர்கள், வர்த்தக முகமை நிறுவனத்தினருக்கு, பகிர்ந்து வருகின்றனர்.***

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
27-மார்-202016:02:59 IST Report Abuse
Vijay D Ratnam வெல்டன் ஸ்ம்ரிதி ராணி அவர்களே. நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். விழுவதே முன்பைவிட அதிகம் எழுவதற்காக. பாகிஸ்தான் எப்போதுமே நம் எதிரிதான். அவனது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கிறோம். அனால் சீனா முதுகில் குத்தும் துரோகி. இங்கே சீனா தூக்கி வீசும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டுபவர்கள் அதிகம். நவம்பர் மாதமே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சீன வைரஸ் இன்று உலகம் முழுக்க பரப்பப்பட்டு உலக பொருளாதாரத்தை நாசமாக்கும் வேலை கச்சிதமாக செய்யப்படுகிறது. உலக மக்கள் சீனர்களை புரிந்துக் கொள்ளும் நேரம் இது. சீனாவுக்கு கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. சீனாவால் திட்டமிட்டு பரப்பபட்ட இந்த சீன வைரஸால் பாதிக்கப்பட்ட பணக்கார நாடுகளான அமெரிக்காவும், இங்கிலாந்தும், ஃபிரான்சும், ஜெர்மனியும், ஜப்பானும், ஸ்விட்சர்லாந்தும், தென் கொரியாவும், ஈரானும் இந்த பிரச்சினையை லேசில் சும்மா விடமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. சீனா பல நாடுகளாக சுக்கல் சுக்களாக சிதறும் காலம் வந்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X