பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுப்புப்பணிகளை கண்காணிக்க 17 குழுக்கள் நியமனம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

தேனி: 'கொரோனா' நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபட 17 கண்காணிப்பு குழுக்களை மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது.மாவட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு, அம்மா உணவகங்கள், சமூக சமையலறை பணிகள் கண்காணிப்புக் குழுவை துணை கலெக்டர் (பயிற்சி) நிறைமதியும், போக்குவரத்து வாகனங்கள் ஏற்பாடுகளை தேர்தல் தாசில்தார் ஆர்த்தி, தேவையான பொருட்கள் வாங்கும் குழுவை ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கவிதா, தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க சப்-கலெக்டர் (பயிற்சி) பாலசந்தர், தனிமைப் படுத்தப்பட்ட வார்டுகளை கண்காணிக்க பொதுப் பணித்துறை மேற்பார்வை பொறியாளர் (கட்டடங்கள்) மாதவன், உதவி மேற்பார்வை பொறியாளர் (மருத்துவப் பணிகள்) நடராஜரத்தினம், கலெக்டர் அலுவலக டி' பிரிவு கண்காணிப்பாளர் ஜாஹூர்உசேன், கலெக்டர் அலுவலக மாவட்ட வழங்கல் அலுவலக கண்காணிப்பாளர் மருதுபாண்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சுத்தப்படுத்தும் குழு, பொருட்கள் வழங்கல் குழு, தகவல் தொடர்பாளர் கண்டறியும் குழு, சமூக இடைவெளி கண்காணிப்புக் குழு, தகவல் தொடர்புக் குழு, அரசு உத்தரவுகள், அறிக்கைகள் வழங்கும் குழு, போலீசாரிடம் தகவல்களை பெறவும், வழங்கும் பணிக்கு சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு தங்கையாவும், அரசுத்துறை உத்தரவுகளின் விபரங்களை வழங்கும் குழு, போலீசார் தகவல் தொடர்பு குழு, அரசாணைகள், புள்ளி விபரங்களை அளிக்கும் குழு, நிதி மேலாண்மைக் குழு, தனியார் நிதியுதவி வழங்கல், நோய் தடுப்புப் பணிகளுக்கான நிதி சார்ந்த பணிக்குழு உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X