பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' விழிப்புணர்வு ஆலோசனை

Added : மார் 27, 2020
Share
Advertisement

கூடலூர்: மலேசியாவிலிருந்து குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு வந்த வாலிபருக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சித் தலைவர் சந்தித்து ஆலோசனை வழங்கினர்.மலேசியாவிலிருந்து குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் சமீபத்தில் வந்தார். இவர் வந்த விபரம் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.மாவட்ட ஊராட்சி செயலர் பரமசிவம், வட்டார ஊராட்சி அலுவலர் மலர்விழி, ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் மலேசியாவில் இருந்து வரும்போது திருச்சி விமான நிலையத்திலேயே பரிசோதனை மேற்கொண்டதாகவும், கம்பம் அரசு மருத்துவமனை கண்காணிப்பில் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X