சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு விதிமீறல்: 109 பேர் மீது வழக்கு

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட, 109 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருப்பூர் மற்றும் ரூரல் பகுதிகளில், 42 இடங்களில் போலீஸ் செக் போஸ்ட் அமைத்து, போலீசார் கண்காணித்து, மக்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.ஆனால், பலரும் வெளியே வருகின்றனர். இதனால், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மதியம் வரை, 109 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 31 டூவீலர், ஐந்து கார் என, 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வாகனங்கள், ஊரடங்கு உத்தரவு முடிந்த பின் பெற்றுக் கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மாநகர போலீசார் வாகனங்கள் பறிமுதல் செய்யாமல், வெளியில் நடமாடுபவர்களை அறிவுறுத்தி அனுப்பி வருகின்றனர். வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.950 போலீசார் பாதுகாப்புபோலீசார் கூறுகையில், 'வெளியில் நடமாடுபவர்களை அறிவுறுத்தி அனுப்பி வருகிறோம். மருத்துவமனை, மக்கள் நடமாட கூடிய முக்கிய இடம் என, 41 இடங்களில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டேஷனுக்கு தலா, இரண்டு பேர் வீதம், 16 மொபைல் ரோந்து செல்கின்றனர். 30 பீட் போலீசாரும் உள்ளனர்.ஆயுதப்படை போலீசார், 150, பட்டாலியன், 235, ஊர்க்காவல் படை, 100 பேர் மற்றும் உள்ளூர் போலீசார், 350 உட்பட, 950 போலீசார் பணியில் உள்ளனர். தேவையின்றி, வாகனங்களில் வருவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X