பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு கவசம் இன்றி வேலைபார்க்கும் தொழிலாளர்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement
 பாதுகாப்பு கவசம் இன்றி வேலைபார்க்கும் தொழிலாளர்கள்

திருமங்கலம்: கப்பலுாரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி கிடங்கில் இரு நாட்களாக முகக்கவசம் உட்பட எந்தவித பாதுகாப்பும் இன்றி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ஏப்ரலில் இலவசமாக அரிசி, பருப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து கப்பலுார் சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூடைகள் அரசின் அரவை மில்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அங்கு நெல் அரைத்து அரிசியாக்கப்பட்ட பின் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.நேற்று நெல் மூடைகளை லாரிகளில் ஏற்றும் வேலையில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முகக்கவசம், கையுறை போன்றவை அணியாமல் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.சேமிப்பு கிட்டங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இங்கு 18 ஆயிரம் டன் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 150 முதல் 200 டன் நெல் மூடைகள் லாரிகள் மூலம் மில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொழிலாளர்களுக்கு முக கவசம் வழங்கியுள்ளோம். அவர்கள் அணிந்து வரவில்லை, என்றார்.ஆனால் தொழிலாளர்களோ 'முகக்கவசம் உட்பட பாதுகாப்பு கவசங்கள் ஏதும் வழங்கப்படவில்லை' என்றனர்.தொழிலாளர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X