பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய பேக்கரிக்கு 'சீல்' அதிகாரிகள் அதிரடி

Added : மார் 27, 2020
Share
Advertisement
 விதிமீறிய பேக்கரிக்கு 'சீல்' அதிகாரிகள் அதிரடி

பல்லடம்:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல்லடம் அருகே இயங்கி வந்த பேக்கரி ஒன்றுக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.பல்லடம், பொள்ளாச்சி ரோடு, கே. கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே, அறிவழகன், என்பவர் பேக்கரி வைத்துள்ளார். பேக்கரியில், ஊரடங்கு உத்தரவை மீறி, பொதுமக்கள் பலர் கூடியிருந்தனர். இது குறித்த தகவல் கிடைத்து, தாசில்தார் சிவசுப்ரமணியம், போலீசாருடன் சென்றார். உத்தரவை மீறி கடை திறக்கப்பட்டதாக கூறி, அதிகாரிகள் பேக்கரிக்கு சீல் வைத்தனர்.அதேபோல், பல்லடம் வட்டாரத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி, விசைத்தறிகள், மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தன. அவற்றுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட தாசில்தார், அரசு உத்தரவை மீறி, பணிகளை மேற்கொண்டால், நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X