பொது செய்தி

தமிழ்நாடு

அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிக்கு அனுமதி

Added : மார் 27, 2020
Share
Advertisement
 அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிக்கு அனுமதி

ஊத்துக்கோட்டை:காய்கறி, பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
மத்திய அரசு அடுத்த மாதம், 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மாநில எல்லைகள் மூடப்பட்டன. தமிழக- - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டையில் இருந்து இரண்டு சாலைகள் ஆந்திர மாநிலத்தை இணைக்கின்றன.திருப்பதி, சத்தியவேடு ஆகிய இரு சாலைகளின் எல்லையிலும், முகாம் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ், வருவாய், சுகாதாரம் ஆகிய மூன்று துறை அதிகாரிகள் முகாமில் பங்கேற்று, வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.
திருப்பதி செல்லும் சாலையில் உள்ள முகாம் வழியே, பால், குடிநீர், காய்கறி, காஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் மட்டும் தமிழகத்தில் இருந்து, ஆந்திராவிற்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் அனுமதிக்கப்படுகிறது.மேலும், எல்லைகளை கடந்து வரும் வாகனங்களுக்கு, கிருமி நாசினி தெளித்து, ஓட்டுனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் இந்த முகாம்களில் சோதனை நடந்து வருகிறது. இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் செல்வது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X