சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துபாய் சென்று திரும்பிய இன்ஜினியரால் பரபரப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

அவிநாசி:சேவூர், வடுகபாளையம் கிராமத்திற்கு துபாயில் இருந்து வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர், கொங்கு நகர் பகுதியை சேர்ந்த, 35 வயது இளைஞர். இவர், துபாயில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த, 17ம் தேதி விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த அவர், அன்றே திருப்பூர் கொங்கு நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.பின், வடுகபாளையத்தில், தனது தந்தை தங்கியுள்ள தோட்டத்து வீட்டிற்கு வந்துள்ளார். அங்கேயே தங்கியிருந்த அவர் குறித்து, நேற்று முன்தினம் இரவு, அப்பகுதி மக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். துலுக்கமுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பரமன் மற்றும் வருவாய்த்துறையினர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.அவருக்கு தொற்று எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது, இருப்பினும் வரும், 13ம் தேதி வரை, அவர் உட்பட அவரது குடும்பத்தில் உள்ள, 7 பேரை தனிமைப்படுத்தி, சுகாதார பிரிவினர் கண்காணிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X