பொது செய்தி

தமிழ்நாடு

'வதந்திகளை நம்ப வேண்டாம்'

Added : மார் 27, 2020
Share
Advertisement

மீஞ்சூர்:'வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மட்டும் கண்காணிக்கப்படுவதாகவும், மீஞ்சூர் வட்டாரத்தில் யாருக்கும், 'கொரோனா' பாதிப்பு இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்' என, சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
கண்காணிப்பு
மீஞ்சூர் வட்டார சுகாதாரத் துறையினர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.கடந்த, 15 நாட்களுக்கு முன், துபாய், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் திரும்பிய, ஒன்பது பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருகின்றனர்.இவர்கள், அடுத்த மாதம், 12ம் தேதி வரை கண்காணிக்கப்பட உள்ளனர். அவர்களது வீடுகளிலும், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.இச்சம்பவம் பொன்னேரி, மீஞ்சூர் பகுதி களில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. மீஞ்சூர் ஒன்றியத்தில், கொரோனா தொற்று யாருக்கும் இல்லை, வதந்தி களை நம்ப வேண்டாம் என, சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
விழிப்புணர்வு
இது தொடர்பாக, மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தெரிவித்தாவது:வெளிநாடுகளுக்கு சென்று திரும்பி வந்தவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். விழிப்புணர்வுக்காக அவர்களது வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டும், அவர்களுக்கு அழியாத மை மூலம், முத்திரை குத்தப்பட்டும் உள்ளது.தொடர்ந்து, 28 நாட்கள் கண்காணிக்கப்படுவர். யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. வதந்திகளை பரப்பினால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X