தமிழ்நாடு

பாதுகாப்பு கருதி வியாபாரிகளுக்கு முகக்கவசம் : மக்களுக்கு 'சானிடைசர்' வழங்கப்படுமா

Added : மார் 27, 2020
Share
Advertisement

மதுரை: மதுரையில் பலசரக்கு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்கும் வியாபாரிகள் முகக்கவசம் அவசியம் அணிய வேண்டும்.

கடைகளுக்கு முன் குறிப்பிட்ட இடைவெளியில் நிற்க கோடு போட்டு, மக்களுக்கு கிருமிநாசினி(சானிடைசர்) வழங்கி பாதுகாப்பாக வியாபாரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனா தாக்கம் தீவிரமானதால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மதுரையில் நேற்று சில பகுதிகளில் சில்லரை பலசரக்கு கடைகள் திறந்து இருந்தன.

கீழமாசிவீதியில் சில கடைகள் மட்டும் திறந்து இருந்தன. மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் அதிகளவு மக்கள் கூடியதால் மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் காய்கறிகள் அதிகளவில் தேங்கியது. இந்நிலையில் அரசு குறிப்பிட்ட நேரத்திற்குள் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.தமிழ்நாடு உணவு பொருட்கள் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் கூறியதாவது: கீழமாசிவீதி மொத்த பலசரக்கு கடைகளில் இரவு 10:00 மணி - 3:00 மணி வரை சரக்குகளை கடைகளுக்கு கொண்டு வர கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

கடைகளின் முன் ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டம் போட்டு அதில் மக்களை நிற்க வைத்து பொருட்களை வாங்க வைக்க அறிவுறுத்தி உள்ளோம். வியாபாரிகள், மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். வியாபாரிகள் மக்களுக்கு 'சானிடைசர்' வழங்கவும் கூறியுள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X