சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருட்டு வழக்கில் இருவர் கைது

Added : மார் 27, 2020
Share
Advertisement

பொன்னேரி:பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏப்ரல், 14ம் தேதி வரை உள்ள ஊரடங்கு உத்தரவை மீறி செல்பவர்களை, பொன்னேரி போலீசார் கண்காணித்து விரட்டினர். வேண்பாக்கம் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள், மீஞ்சூர் அடுத்த, நாலுார் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த முனேந்திரா, 24, வீரன், 42, என்பதும், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது.அதை தொடர்ந்து, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 7 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய், கைக்கடிகாரம் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X