பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடி மக்களுக்கு ரேஷன் வழங்கப்படுமா

Added : மார் 27, 2020
Share
Advertisement

மதுரை: மதுரை சக்கிமங்கலம் சாட்டையடி காலனியில் வசிக்கும் பழங்குடி மக்கள் ஊரடங்கு உத்தரவால் உணவு உள்ளிட்ட முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதால் உடனடியாக ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் கூறியதாவது:இக்காலனியில் சாட்டை அடிப்போர், பூம் பூம் மாடு வைத்திருப்போர், நரிக்குறவர்கள், குடுகுடுப்பைகாரர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்கள் தினமும் வெளியே சென்று தர்மம் எடுத்தால் தான் உணவு உள்ளிட்ட முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதால் இவர்கள் வெளியே செல்ல முடியாமல் முடங்கி உள்ளனர்.வேறு வருமானம் எதுவும் இல்லாததால் உணவுக்காக சிரமப்படுகின்றனர். அரசு இவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும். இப்பகுதியில் சுகாதார அதிகாரிகள் கிருமிநாசினி தெளிக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X