பொது செய்தி

தமிழ்நாடு

வீதிகளில் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிப்பு: சுகாதார பிரிவினர் தீவிரம்

Added : மார் 27, 2020
Share
Advertisement
 வீதிகளில் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிப்பு: சுகாதார பிரிவினர் தீவிரம்

திருப்பூர்:கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நகரப் பகுதியில் வீதி வாரியாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் மும்முரமாக மேற்கொண்டனர்.கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சுகாதார பிரிவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நகரப்பகுதியில் வார்டு வாரியாக வீதிகள் முழுவதும் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் மற்றும் கிருமி நாசினி அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு துறை அரசு அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்பு, வருவாய்துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகள் மட்டுமே தற்போது இயங்குகின்றன. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலர் மற்றும் ஊழியர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சுகாதாரப் பிரிவினர் அனைவரும் விடுப்பின்றி பணியாற்றி வருகின்றனர்.பாதுகாப்பு அம்சம் இல்லைமாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் தற்போது முக கவசம் அணிந்து பணியாற்றுகின்றனர்.ஆனால் பெருமளவு சுகாதார ஊழியர்கள் அவர்கள் பணிக்கு கைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்கள் உரிய கையுறை அணியாமல் பணியாற்றுவதை பெரும்பாலான இடங்களில் காண முடிகிறது.சுகாதார ஆய்வாளர்கள் இதை முறையாக கண்காணித்து, அனைத்து ஊழியர்களும் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X