பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் வருகை இல்லை கொப்பரை உற்பத்தி முடக்கம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

பொங்கலுார்:உலர் களங்களில் பணி நிறுத்தப்பட்டதால், கொப்பரை உற்பத்தி முடங்கியுள்ளது.பொங்கலுார், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் கொப்பரை உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தேங்காய் பறிப்பு, மட்டை உரித்தல், கொப்பரை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளது.கொப்பரை உலர் களங்களில் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். ஊருக்குச் செல்ல முடியாதவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். எண்ணெய் ஆலைகள் இயங்காததால் வர்த்தகம் நடக்கவில்லை.விவசாயிகள் தங்கள் தோப்புகளில் தேங்காய்களை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.தென்னை மரம் ஏற தொழிலாளர்கள் வராததால், மார்க்கெட்டுக்கு தேங்காய் அனுப்புவது பாதிக்கப்படும். இதனால், உணவு தேவைக்காக விற்பனை செய்யப்படும் தேங்காய் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X