பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைபடுத்தபட்டவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து திரும்பி தனிமைபடுத்தபட்டவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கபட்டது.ஸ்ரீவில்லிபுத்துார் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 17 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பி தங்கள் வீடுகளில் இருக்கின்றனர். இவர்களை கண்டறிந்த சுகாதாரத்துறையினர் அவர்களை வீடுகளில் தனிமைபடுத்தி இருக்க அறிவுறுத்தபட்டு போலீசாரால் கண்காணிக்கபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அவர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவர் காளிராஜ் அறிவுறுத்தலின்படி நிலவேம்பு கஷாயத்தை அரசு மருத்துவமனை ஊழியர்கள் வீடுதேடி சென்று வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X