பொது செய்தி

தமிழ்நாடு

நோய் தடுப்பு பணி; நகராட்சி தீவிரம்

Added : மார் 27, 2020
Share
Advertisement
 நோய் தடுப்பு பணி; நகராட்சி தீவிரம்

பல்லடம்:பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை, துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டனர்.பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், கடைவீதி, அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில், நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.நுாற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், பாதுகாப்பு கவசங்கள் அணிந்தபடி, பொதுமக்கள் கூடும் இடங்களில், சுகாதார பணிகளில் ஈடுபட்டனர். தேங்கியிருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, பொது இடங்களில், பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டது.வார்டுகளில் தேங்கியிருந்த குப்பைகளை அப்புறப்படுத்துவது, அவற்றை தரம் பிரித்து எடுத்து செல்வது, கிருமி நாசினி தெளித்தல் என, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X