பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டில் இருந்தபடி என்ன செய்யலாம்? கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க அறிவுறுத்தல்

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:'ஆசிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான கலையினை மாணவர்களுக்கு கற்றுத்தரும் பொருட்டு, நடனம், வரைதல், பாரம்பரிய உணவு சமைத்தல் மற்றும் நடித்தல் போன்றவற்றிக்கான கருத்துருக்களை வீட்டில் இருந்தபடியே தயார் செய்யலாம்' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்ரல் 14ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களையும் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.இதில் மேற்கொள்ள வேண்டிய பணி விவரங்கள் குறித்த சுற்றறிக்கையை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் நேற்று வெளியிட்டார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:அரசு தேர்வுகள் இயக்கத்தால், பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மதிப்பீடு பணிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பணிகள் பின்னர் அறிவிக்கப்படும்.வரும் 2020-21 கல்வி ஆண்டுக்குரிய கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் தயார் செய்யலாம். மேலும், தங்களுக்கு பிடித்தமான கலையினை மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்கு ஆயத்த பணியாக, நடனம், வரைதல், பாரம்பரிய உணவு சமைத்தல், வண்ணம் தீட்டுதல் மற்றும் நடித்தல் போன்றவற்றிக்கான கருத்துருக்களை ( கான்செப்ட்) தயார் படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு தயார் செய்த கலை நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் பயிற்சியளித்து போட்டிகளில் பங்குபெற செய்யலாம்.மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். அதேபோல், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும், பதிலளிக்கும் நிலையிலும், தேவை ஏற்படின் உடனடியாக அலுவலகத்திற்கு வருகை புரியும் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X