பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா  தடுப்பு பணியில்தன்னார்வலர் கைகோர்ப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தன்னார்வலர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தினர்.கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் போலீசார் நகரப் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் பெரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.இப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிலருக்கும், திருப்பூர் நகர பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காமல் தவித்தவர்களுக்கும் அட்சய பாத்திரம் என்ற அமைப்பினரும், சாமுண்டிபுரத்தை சேர்ந்த கண்ணன் மாவு விற்பனை நிறுவனமும் இணைந்து நேற்று காலை மற்றும் இரவு என இருவேளைக்கும் இட்லி பொட்டலங்கள் தயார் செய்து வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X