பொது செய்தி

தமிழ்நாடு

கடம்பத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணி

Added : மார் 27, 2020
Share
Advertisement
 கடம்பத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில், கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, 43 ஊராட்சிகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஊராட்சி பகுதி முழுதும் துாய்மை காவலர்களால் சுத்தம் செய்யப்பட்டு, பிளீச்சிங் பவுடர் துாவப்படுகிறது. இந்த பணிகள் காலை, மாலை இரு வேளைகளிலும் நடந்து வருகிறது.
மேலும், ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.இதேபோல், கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் வரும் ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் அலுவலக நுழைவு வாயிலில் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து அலுவலகத்திற்கு வருகின்றனர்.இதேபோல், ஊராட்சி பகுதிகளிலும், கைகளை சுத்தம் செய்யும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X