பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு வாசலில் வேப்பிலை கிராம மக்கள் நம்பிக்கை

Added : மார் 27, 2020
Share
Advertisement
 வீட்டு வாசலில் வேப்பிலை  கிராம மக்கள் நம்பிக்கை

திருப்பூர்:கொரோனா வைரசை விரட்டியடிக்கும் வகையில், கிராமப்புற பெண்கள், வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து, வேப்பிலை கரகம் வைத்து வழிபட துவங்கியுள்ளனர்.வைரஸ் தொற்று பரவியதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தவறாமல் பின்பற்றும் கிராமப்புற மக்கள், மஞ்சள் நீர் தெளிப்பு, வேப்பிலை காப்பு என, பாரபம்பரிய நோய் தடுப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.ஒரு சொம்பில் மஞ்சள் நீர் கலந்து, வேப்பிலையை வைக்க வேண்டுமென, 'வாட்ஸ் ஆப்' ஒரு தகவல் பரவியது. அதன்படி, வீட்டு வாசலில், வேப்பிலை கரகம் வைத்து பெண்கள் வழிபட துவங்கிவிட்டனர். திருப்பூர், வீரபாண்டி, மங்கலம், சுல்தான்பேட்டை, முதலிபாளையம், கணக்கம்பாளையம் என, சுற்றுப்பகுதிகளில், இந்த வழிபாடு துவங்கியுள்ளது.பெண்கள் கூறியதாவது:அதிகாலையில், வீட்டு வாசலில் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளிக்கிறோம். சிறிய செம்பு ஒன்றில், மஞ்சள் நீர் கலந்து, அதில், வேப்பிலையை சொருகி வாசல் படியின் ஒருபுறம் வைக்கிறோம். மற்றொருபுறம், அகல்விளக்கில், திரியுடன் நல்லெண்ணெய் ஊற்றி, மற்றொருபுறம் வைக்கிறோம். சிலர், மஞ்சள், உப்பு ஆகியவற்றையும் அருகே வைக்கின்றனர். கண்ணுக்கு தெரியாத கிருமியை அழிக்கும் ஆற்றல், மஞ்சள் மற்றும் வேப்பிலைக்கு உண்டு என்ற நம்பிக்கையுடன், இதை பின்பற்றுகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக வீட்டிற்கு முன்பு, வேப்பிலை உப்பு மற்றும் தீபம் வைத்துள்ளனர். இடம்: அக்ரஹாரபுத்தூர், திருப்பூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X