பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு ஊராட்சிக்கு 12 லி., கிருமிநாசினி வழங்கல்: குடியிருப்பு பகுதியில் தெளிக்கும் பணி துவக்கம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:கிராமப்புற மக்கள் அச்சத்தை போக்கும்வகையில், கிருமிநாசினி தெளிக்க வசதியாக, ஒவ்வொரு ஊராட்சிக்கும், 12 லிட்டர், கிருமிநாசினி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. நிதி ஆதார வசதிபடைத்த மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட தலைநகரில், கிருமிநாசினியை தெளித்து, மக்களின் அச்சத்தை போக்கியுள்ளது.கிராமப்புறங்களில், நிசப்தம் நிலவுகிறது. வைரஸ் அச்சம் இருந்தாலும், துாய்மை பணியாளர்கள், வீடு வீடாக சென்று, குப்பையை சேகரித்து, அப்புறப்படுத்தி வருகின்றனர்.ஊராட்சியின் துாய்மை பணியாளர், துாய்மை காவலர்கள், குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர்கள், 'மாஸ்க்' அணிந்து வெளியே சென்றுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், வழக்கம் போல், குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் சப்ளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தை போக்க, குடியிருப்பு பகுதிகள், முக்கிய ரோடுகள், மக்கள் கூடும் பகுதிகளில், கிருமிநாசினி தெளிக்க, ஊரக வளர்ச்சி முகமை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, 'லைசால்' கிருமி நாசினி, ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சிக்கும், முதல்கட்டமாக, தலா, இரண்டு லிட்டர் அளவுக்கு, 'லைசால்' வழங்கப்பட்டுள்ளது. இதை, கொசு மருந்து தெளிப்பான்கள் மூலமாக, ஊராட்சி பகுதிகளில் தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியபடி, தலா, 50 லிட்டர் கேன்களாக, 'லைசால்' மொத்தமாக கொள்முதல் செய்து, ஒவ்வொரு ஊராட்சிக்கும், முதல்கட்டமாக, தலா, 12 லிட்டர் வரை வழங்கியுள்ளோம்.ஒரு லிட்டர் 'லைசால்', 19 லிட்டர் தண்ணீருடன் கலந்து, தெளிக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X