சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பதட்டம் இடையே கொலை: ராஜபாளையத்தில் பெண் உட்பட 5 பேர் கைது

Added : மார் 27, 2020
Share
Advertisement

ராஜபாளையம: கொரோனா ஊரடங்கு உள்ள நிலையில் ராஜபாளையத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமிமனைவி செல்வி. அப்பகுதியில் மாடு மேய்த்து வந்தார். இவரது மகன் விக்னேஷ், 25. கொலை வழக்கில் ஜாமினில் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த சின்ன சுந்தரம் 35, என்பவர் தனது சகோதரி சுந்தரி வீட்டில் தங்கி மாடுகளை மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.இருமாதங்களுக்கு முன் செல்வியை மானபங்க படுத்திய வழக்கில் சின்ன சுந்தரம் ஜெயிலுக்கு சென்று ஜாமினில் வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரிவாளுடன் வந்த சிலர் சின்ன சுந்தரத்தை வெட்டியதில் இறந்தார். விசாரணையில் செல்வி, கணவர் முத்துச்சாமி, மகன் விக்னேஷ் 25. இவரது நண்பர்களான ராஜபாளையம் மலையடிப்பட்டி சுந்தர் 28, ஜீவானந்தம் 25, உட்பட 5 பேர் கொலை செய்தது தெரிந்தது. சுந்தரி புகார் படி சேத்துார் இன்ஸ்பெக்டர் குமார் ஐந்து பேரையும் கைது செய்தனர். கொரோனா ஊரடங்கு உள்ள நிலையில் இதுபோன்ற கொலை சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X