பொது செய்தி

தமிழ்நாடு

சாலை, பூட்டிய கடைகளில் கிருமி நாசினி தெளிப்பு

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020
Share
Advertisement
 சாலை, பூட்டிய கடைகளில் கிருமி நாசினி தெளிப்பு

திருவள்ளூர்:நகராட்சி சாலை, தெருக்கள், பூட்டிய கடைகளில் இயந்திரம் மூலம் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சியில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, துாய்மை பணியாளர்கள் மூலம், தினமும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆணையர் சந்தானம் உத்தரவின்படி, சுகாதார அலுவலர் செல்வராஜ் மற்றும் ஆய்வாளர்கள், துாய்மை பணியாளர்கள், நேற்று, நகராட்சி தெருக்கள், வீதிகள் மற்றும் பூட்டிய கடைகளில், கிருமி நாசினி திரவம் தெளித்தனர்.இதற்காக, பிரத்யேகமான டிராக்டரில், 400 லிட்டர் கிருமி நாசினி திரவம் தயாரிக்கப்பட்டது. அதை, துாய்மை பணியார்கள், வீதி தோறும் இழுத்துச் சென்று, 'ஸ்பேரே' மூலம் தெளித்தனர். மேலும், கலெக்டர் அலுவலகத்திலும், கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது.நேற்றும் சாலைகளில், வாகன போக்குவரத்து இயங்காமல், வெறிச்சோடிக் காணப்பட்டது. மருந்தகங்கள், காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு வந்தவர்கள், சிறிது இடைவெளி விட்டு, வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

லத்தியை துாக்காத போலீசார்

ஊரடங்கு அமல்படுத்த முதல் நாளான நேற்று முன்தினம், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை, போலீசார் லத்தியால் முதலில் தாக்கி விட்டு, அதன் வந்த விபரங்களை கேட்டறிந்தனர். இது, அவசர பணிக்கு பிரதமர் அறிவித்திருந்த துறையினரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.கருணை காட்ட வேண்டிய நேரத்தில், கெடுபிடி காட்டியது, போலீசார் மீது பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதுகுறித்து நம் நாளிதழிலும் விரிவான செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில், நேற்று, திருவள்ளூர் நகர சாலைகளில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், லத்தியை துாக்காமல், பணியாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X