பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் தடுப்பு; மார்க்கெட்டில் மருத்துவ முகாம்

Added : மார் 27, 2020
Share
Advertisement
 கொரோனா பரவல் தடுப்பு; மார்க்கெட்டில் மருத்துவ முகாம்

திருப்பூர்:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று பரவலாக உள்ளது. நம் நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விலகலை பின்பற்றும் வகையில் வரும் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் போதும், மக்களின் அத்தியாவசியத் தேவை எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நிலையில், மருந்து, பால், மளிகை, காய்கறி ஆகியன உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அவை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் தினசரி மார்க்கெட்டில் காய்கறி விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். மார்க்கெட் வளாகத்திலும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் முறையாக கைகள் கழுவி பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அங்கு ஒரு மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்பு இருப்பின் கண்டறியப்பட்டுஉரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு அவர்கள் கவனமாக பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X