பொது செய்தி

தமிழ்நாடு

வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு: சுகாதார பிரிவு நடவடிக்கை 'சுறுசுறு'

Added : மார் 27, 2020
Share
Advertisement
 வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு: சுகாதார பிரிவு நடவடிக்கை 'சுறுசுறு'

திருப்பூர்:திருப்பூரில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்துப் பகுதியிலும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார பிரிவினர் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் விடுமுறையின்றி பணியாற்றி வருகின்றனர்.திருப்பூரிலுள்ள அனைத்து பகுதிகளிலும், ரோடுகள், தெருக்கள், வீதிகளில் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. கோவில், சர்ச் மற்றும் மசூதிகள் அமைந்துள்ள வீதிகளில் நேற்று சுகாதார பிரிவினர் கிருமி நாசினி தெளித்தனர்.தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் மும்முரமாக நடந்து வருவதால், துாய்மை பணியாளர்கள் அனைவரும் காலை முதல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் மாநகராட்சியின் அம்மா உணவகம் மூலம் காலை மற்றும் பகல் நேர உணவு வழங்கப்படுகிறது.அருகே பணியாற்றும் ஊழியர்கள் நேரடியாக சென்று உணவருந்துகின்றனர். வேறு பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு பொட்டலம் தயார் செய்து ஊழியர்கள் மூலம் அவர்கள் பணியாற்றும் இடங்களுக்கு கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X