பொது செய்தி

தமிழ்நாடு

'எங்களுக்கு பாதுகாப்பு இல்லை!' துாய்மை பணியாளர் போர்க்கொடி

Added : மார் 27, 2020
Share
Advertisement
 'எங்களுக்கு பாதுகாப்பு இல்லை!' துாய்மை பணியாளர் போர்க்கொடி

திருப்பூர்:கொரோனா வைரஸ் அச்சத்தால், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, திருப்பூரில் துாய்மை பணியாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 15 வார்டுகளில், தனியார் நிறுவனம் சார்பில் துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் வட மாநிலங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், கோவில்வழியில் உள்ள தற்காலிக குடியிருப்பில் தங்கியுள்ளனர்.இந்த ஊழியர்கள் தங்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம், கையுறைகள் வழங்க வேண்டும்/ தற்காப்பு நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை மற்றும் டி.டி., ஊசி போட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி, ஊழியர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று துாய்மை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து மாநகர நகர் நல அலுவலர் பூபதி கூறுகையில், ''வட மாநில ஊழியர்கள் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு உபகரணங்கள் தனியார் நிறுவனம்தான் வழங்க வேண்டும். இருப்பினும் தற்போதைய நெருக்கடியான நிலையை கருத்தில் கொண்டு, மாநகராட்சி சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.துாய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் கூறுகையில், 'இன்று (நேற்று) மாலைக்குள் கையுறை, முக கவசம் உட்பட பாதுகாப்பு உபகரணம் வழங்க, நகர்நல அலுவலர் உறுதியளித்துளார். நாளை (இன்று) பணிக்கு திரும்புவர்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X